அறிமுகம்

வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார்


1962ம் ஆண்டு ஒரு பாரம்பரியக் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த வேத ஆராய்ச்சியாளர் எம்.எஸ்.வசந்தகுமார் 1983ம் ஆண்டில் இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றத் தொடங்கினார்.

இதன் பின்னர் 1984 முதல் 1988 வரை இலங்கை வேதாகமக் கல்லுரியில் படிக்கும் காலத்திலேயே வேதாகமத்தை ஆழமாக ஆராய்ச்சி செய்து வந்த இவர் 1985ம் ஆண்டிலிருந்து 2004ம் ஆண்டுவரை இலங்கை வேதாகமக் கல்லுரியில் விரிவுரையாளராகப் பணியாற்றியதோடு இலங்கையிலிருந்து வெளியாகும் சத்தியவசனம் சஞ்சிகையின் ஆசிரியராகவும் உலகின் பல நாடுகளில் வேதாகமக் கருத்தரங்குகள் நடத்துகிறவராகவும் இருந்தார்.


இவற்றிற்கு இடையில் 1996 முதல் 2001வரையிலான காலப்பகுதியில் இங்கிலாந்தில் தனது இறையியல் உயர் கல்வியை மேற்கொண்டார். 2005ம் ஆண்டிலிருந்து லண்டன் நகரிலுள்ள இம்மானுவேல் கிறிஸ்தவ ஐக்கியம் சபையில் இறைபணியாற்றும் இவர் தமிழில் வேதஆராய்ச்சி நூல்களை எழுதி வெளியிடுவதோடு பல நாடுகளில் வேதாகமத்தைப் போதித்தும் வருகின்றார்.

வேதாகமத்தைத் தமிழ்க் கிறிஸ்தவர்கள் சரியானவிதத்தில் புரிந்துகொள்ளவேண்டும் என்னும் மனப்பாரத்துடன் வேதாகமத்தை ஆராய்ச்சி செய்வதற்குத் தன்னை அர்ப்பணித்துள்ள எம்.எஸ்.வசந்தகுமார் இதுவரையில் 40ற்கும் அதிகமான வேதஆராய்ச்சி நூல்களையும் இறையியல் பாடக்குறிப்பு நூல்களையும் எழுதியுள்ளளோடு பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்குகின்றார்.

Pas MSV 50%


Personal Interview - NLM TV, France

Interview in My Jesus TV London

Interview with TCM Network, Norway

Interview with Roopavahaini in SriLanka


OUR MISSION

The mission of the church is to glorify God by making disciples through the gospel of Jesus Christ. God’s mission and the mission of His Church are inseparably linked.

OUR VISION

There is one God, who exists eternally in a fellowship of three distinct and equal persons: Father, Son, and Holy Spirit who are unchangeable in their holiness, justice, wisdom and love.